காவியங்கள் பல கோடிகண்டதுண்டோ"
- DEVIATORS
- Jan 16, 2021
- 1 min read
Kalpana Kamalanathan
Faculty of Law
University of Colombo

மங்கை அவள் தனில்
மடியோடு கொடி மலர
மானத்தின் விழிதனிலே
மலரும்மொட்டாக
மென்மையின் அம்சமாய்
மெல்லிசை பிறந்ததுவோ....!
காற்றின் மொழிதனில்
கவிபாட……
காலத்தின் விழிகளில் . அவள்
உருண்டோட……..
கருணை எனும் மழையால்
காவியம் பிறந்ததுவோ….
ஆழிக் கடலின் அடிகண்டு
அழியாதசரித்திரமாய்
அன்பின் வழி நின்று,
நன்னெறியின் சாரமாய்
ஆனதோ இந்து மதம்
அழகாய் ஓர் ஓவியமாய்
அடக்கத்தின்அம்சமாய்
ஊன்னின்றி வருவோருக்கு
உணவென்று…
உள் மனதோடு பிரசவித்தாள்
சேர, சோழ, பாண்டிய
மன்னர்களின் பறை சாற்றி,
விண்ணையும் துளைக்கும்
வில் அம்பு போல
வீரத்தின் விழிகளிலே
விந்தையானாள்
விழி நீர் வழியக் கண்டு
விண்ணுலகமே வியந்த
பண்பையும் பணிவன்பையும்
தன்னகத்தே கொண்டு
இலக்கண இலக்கியங்கள் என…..
…..இந்து மத……
இலக்கியங்கள் பல கோடி
கண்டதுண்டோ!
ReplyForward
Comments